தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர் பா விஜய் இவர் தற்பொழுது இயக்குனராக புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஜீவா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இரக்கிறார்கள் படத்திற்கு ‘மேதாவி’ என பெயர் வைத்துள்ளார்கள் படக்குழு.
பா விஜய் இயக்கும் மேதாவி திரைப்படம் ஒரு திகில் கலந்த திரைப்படமாகும் இந்த நிலையில் பா விஜய் இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார் அவர் கூறியதாவது நான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு உண்மை சம்பவம் இருக்கும், அதே போல் நேர்த்தியான கதையும் சமூக கருத்தும் இடம்பெறும்.
இதற்கு முன் நான் இயக்கிய ஸ்டாபெர்ரி திரைப்படம் ஒரு திகில் திரைப்படம் என்றாலும் அதில் ஒரு மையக்கருத்தை சொல்லியிருந்தேன் அதேபோல் அடுத்ததாக இயக்கிய ஆருத்ரா படத்திலும் ஒரு மையக்கருத்து இருந்தது, அப்படி இருக்கும் நிலையில் நான் இயக்கும் மேதாவி திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஜீவா முதன்முதலில் இணைந்து நடிக்கிறார்கள்.
அர்ஜுன் ஒரு விசாரணை அதிகாரியாகவும் ஜீவா திரைப்பட உதவி டைரக்டராக படத்தில் வருவார்கள், படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா இவர் வெளிநாட்டு பத்திரிகை நிருபராக நடிக்கிறார், இந்த திரைப்படம் ஒரு குற்ற பின்னணியிலான திகில் திரைப்படம், படத்தில் ஒய் ஜி மகேந்திரன், ராதாரவி, அழகம்பெருமாள் ரோகிணி ஆகிய 4 பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள், இந்த திரைப்படத்திலும் ஒரு முக்கியமான சமூக கருத்து இருக்கும் என் பா விஜய் கூறியுள்ளார்.