இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முதலில் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற அடுத்து இவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற காமெடி ஆக்ஷன் கலந்த சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இந்த படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றிய போது ஆரம்பத்தில் நட்பாக சென்றுக்கொண்டிருந்த இவர்களது உறவு ஒரு கட்டத்தில் காதலாக மாறி சினிமா உலகில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருகின்றனர். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்காக தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் அவர்கள் இருவரும் அப்பப்போ வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தாலும் ஒரு பக்கம் அவர்களது கேரியரில் கவனம் செலுத்தி சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றனர் இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக..
சில தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கசிந்து வருகின்றன இருந்தாலும் இந்த தகவல் குறித்து விக்னேஷ் சிவன் அல்லது நயன்தாரா இருவரும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தொகுப்பாளினி பிரியங்கா விக்னேஷ் சிவனிடன் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு விக்னேஷ் சிவன் சரியான நேரத்தில் நான் அறிவிப்பேன் என கூறியுள்ளார் மேலும் பிரியங்கா என்னை திருமணத்திற்கு அழைப்பீர்களா என கேட்டதற்கு முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான் என சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.