தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவருர் நடிப்பிலும் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருவரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இத்திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்துள்ளது விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்பே இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளியானது. இவ்வாறு வெளியான நாட்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாராட்டி வந்தார்கள்.
ஆனால் தற்பொழுது விக்னேஷ் சிவனை விமர்சனம் செய்து வருகிறார்கள். கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது ஏனென்றால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகை நயன்தாரா புடவை கட்டிக் கொண்டு நடனம் ஆடுகிறார் ஆனால் சமந்தா அரைகுறை ஆடையுடன் அதிக கவர்ச்சியில் இருக்கும்படி குத்தாட்டம் போடுகிறார்.
எனவே ரசிகர்கள் தனது காதலியை மட்டும் அடக்கம் ஓடுக்கமாக கண்ணியமாக புடவையை கட்டிக்கொண்டு நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்றும் சமந்தாவுக்கு மட்டும் கிளாமரான காஸ்டீம் கொடுத்துள்ளார் என தாறுமாறாக விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
நயன்தாரா மற்றும் சமந்தா இருவருக்குமே உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருந்து வருகிறார்கள் நயன்தாராவிடம் சமந்தா தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் காஸ்டியும் விஷயத்தில் விக்னேஷ் சிவன் தனது காதலியைப் மட்டும் அடக்க ஒடுக்கமாக நடிக்க வைத்திருப்பது தவறு என்று கூறி வருகிறார்கள்.