இந்த மாதிரி ஒரு கதை எழுதி வைத்துக் விஜய்காக பல வருடங்களாக காத்திருக்கும் வெற்றிமாறன்.! மிஸ் பண்ணிட்டாரே விஜய்..

vetri maran
vetri maran

director vetrimaran written a story for vijay in 21 years before: வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன் இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு அசுரன் திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட்டானது.

இவர் தனுஷை வைத்து ஒரு சில திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார்.  அந்த திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டடித்தது தான் என்று கூறலாம்.

அதிலும் குறிப்பாக இவர் தனுஷை வைத்து இயக்கிய ஆடுகளம், வடசென்னை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இவர் சூரியை வைத்து ஒரு படமும் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் இளையதளபதி விஜயின் அழைப்பிற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் 1999 ஆம் ஆண்டு ஒரு கல்லூரி கதையை விஜய்க்காக எழுதினேன்.

ஆனால் அப்போது அந்த படத்தை இயக்குவதற்கு முடியவில்லை என்று சொல்லியிருந்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.