தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவரது காமெடிக்கு என்றே தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். காமெடி நடிகர் சூரி சினிமாவை தவிர்த்து பல இடங்களில் ஹோட்டல்களையும் நடத்தி அதன் மூலமும் காசு பார்த்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஒரு சில சீன்களில் விஜய் சேதுபதி வந்து போவார் எனக் கூறப்பட்டது. விடுதலை படத்திற்காக சூரி உடற்பயிற்சி எல்லாம் மேற்கொண்டு உடலை பிட்டாக ஹீரோ போல் மாற்றி நடித்து வருகிறார் இந்த படத்தின் மூலம் தனது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்று ஆசையில் வந்த காமெடி வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் அந்த காட்சியை பார்க்கும் போது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் சூரியை வைத்து எடுத்த அதிக காட்சிகளில் சில காட்சிகளை நீக்கி விட்டாராம். இதனால் விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் காட்சியே அதிகமாக இருப்பதால் இது சூரி படம் அல்ல விஜய் சேதுபதியின் படம் போல் ஆகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி அவரது மகனையும் ஒரு சில காட்சிகளின் நடிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் சூரி வெற்றிமாறனை நம்பி மோசம் போய் விட்டார் மற்றும் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளதால் தனது ஆசையில் விஜய் சேதுபதி மண்ணை வாரி போட்டு விட்டார் என்ற கோபத்தில் இருக்கிறார் சூரி.
இந்த நிலையில் ஹீரோ நமக்கு செட்டாகாது எனக் கருதி மீண்டும் காமெடி வாய்ப்பை தேடி வருகிறார். ஆனால் சினிமாவில் சூரி இல்லாத இடத்தை யோகி பாபு பயன்படுத்திக் கொண்டு தற்போது அதிக பட வாய்ப்புகளை யோகி பாபு கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.