‘விடுதலை’ ஒரு டப்பா படம் என வெற்றிமாறனை கழுவி ஊற்றிய பிரபலம்.! கூச்சமே இல்லாமல் கதை திருடினாரா?

viduthalai
viduthalai

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தற்பொழுது நகைச்சுவை நடிகர் சூரியை விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அந்த வகையில் முதல் பாகம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் கலவை விமர்சனத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் அப்பட்டமான கதை திருட்டு என வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா. முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இது ஜெயமோகன் எழுதிய கதை என கூறப்பட்டாலும் பாலமுருகன் எழுதிய சோலகர் தொட்டி என்ற நாவலில் இருந்தும் இன்னும் பல நாவல்களில் இருந்தும் கதைகளை சேமித்து அவரிடம் இருந்து உரிமை வாங்காமல் அனைத்து நாவல்களையும் கலந்து விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது.

எனவே வெற்றிமாறன் யாரிடமும் உரிமையை கேட்காமல் இவ்வாறு திருட்டுத்தனமாக அனைத்தையும் செய்து உள்ளார் எனவும் பல்வேறு கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை தவறாக சித்தரித்து மக்களை ஏமாற்றியுள்ளார் வெற்றிமாறன் எனவும் கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக இந்த படம் ஒரு டப்பா படம் என எழுத்தாளர் இரா. முருகவேல் கோபத்தில் வெற்றிமாறனை திட்டி தீர்த்துள்ளார்.

மேலும் இதனை அடுத்து இந்த கதை திருட்டில் ஜெயமோகனுக்கு எந்த ஒரு பங்கும் இருக்காது என நினைக்கிறேன் எனவும் வெற்றிமாறன் இன்னொருவர் கதைக்கு தன் பெயரை போடும்பொழுது கொஞ்சம் கூட கூசவில்லையா.! என கேள்வி எழுப்பி உள்ளார். இவ்வாறு இந்த படத்தில் சூரி, ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படம் பல சர்ச்சையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இவ்வாறு முதல் பாகத்திற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இரண்டாவது பாகம் வெளியாகமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.