தமிழ் சினிமாவில் இன்று வெற்றி இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன் இவர் திரையுலகில் பல வருடங்களாக இருந்தாலும் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்து உள்ளார் முதலில் தனுஷை வைத்து பொல்லாதவன் என்னும் படத்தை எடுத்து திரை உலகில் என்ட்ரி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து ஆடுகளம், அசுரன், வடசென்னை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த..
இவர் அண்மையில் விடுதலை என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டது அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் பாகம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்பையா, சேததன் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்தனர்.
படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை படமாக காட்டியது படத்தின் ஒவ்வொரு செகண்டும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களை தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் அடித்து நொறுக்கியது.
கடைசிவரை இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அதனை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் சம்பளம் குறித்து ஒரு தகவல் இணையதள பக்கங்களில் உலா வருகிறது.
விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு சேர்ந்து வெற்றிமாறன் 30 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது. அடுத்த படத்தில் அவரது சம்பளம் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.