புதிதாக உருவாகும் கேங்ஸ்டர் படம்.? நடிப்பு அசுரனுடன் கைகோர்க்கும் இயக்குனர் வெற்றிமாறன்..! தனுஷுக்கு இனி டாட்டா தான் போல..

vatrimaran-

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது முற்றிலும் காடு மலை சார்ந்த பகுதிகளில் எடுக்கப்படுவதால் ஷூட்டிங் சற்று தாமதமாகுவதாக சொல்லப்படுகின்றன.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது குறிப்பாக வடசென்னை படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். ஏனென்றால் முதல் பாகம் சூப்பராக முடிந்த நிலையில் இரண்டாவது பாகம் ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்ததாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதனால் ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் வெற்றி மாறனையும், தனுஷயும் கேட்டு வருகின்றனர். அண்மையில் தனுஷ் கூட வெற்றிமாறன் கையில் இருக்கும் அனைத்து படங்களையும் முடித்துவிட்டு வடசென்னை 2 படத்தில் நடிக்க கூப்பிட்டால் உடனடியாக போய் நடிப்பேன் என கூறி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து பகத் பாசிலை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷை விட மிகச் சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் பகத் பாஸில். அவர் அண்மைக்காலமாக மலையாள சினிமாவையும் தாண்டி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவருக்கு தென்னிந்திய சினிமா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

அதனால் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் அதில் ஹீரோவாக நடிக்க பகத் பாசிலுக்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் தனுஷும் வெற்றி மாறனும் இணைவது இன்னும் சிறிது காலம் தள்ளிப் போடுவார்கள் என தெரிய வருகிறது.