தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான இயக்குனராக வளர்ந்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்நிலையில் தன் மனதை மிகவும் பாதித்த திரைப்படம் என்றால் அது இதுதான் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பொதுவாக பல்வேறு இயக்குனர்களும் ஒரே மாவில் இட்லி வடை போண்டா என போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் பல்வேறு நாவல்களைப் படித்து அதில் இருந்து கதையை தேர்வு செய்து திரைக்கதையாக எடுத்து புகழ்பெற்ற இயக்குனர் தான் வெற்றிமாறன்.
பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் சிறந்த கதை அம்சத்தை கொண்டிருப்பதால் அவருடைய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் அடித்து வருகிறது.
இப்படிப்பட்ட இயக்குனர் மனதை பாதித்த திரைப்படம் என்ன என்றால் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் விஜய் ஆகியோர் நடித்துள்ளார்கள் மேலும் கதாநாயகியாக சுவாதி நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார் ஆனால் இதுபோன்ற திரைப்படத்தை இனிமே சசிகுமார் இயக்குவாரா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.
இவ்வாறு வெற்றிமாறன் கூறியதன் காரணமாக அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இதுவரை வெற்றிமாறன் அவை என்ன என்பதை மட்டும் முழுமையாக தெரிவிக்கவில்லை.