தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு பிரமாண்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் இவரது திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் ரசிகர்கள் மக்கள் ரசிக்கும் படியும் இருந்ததால்..
இவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துள்ளது இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்களான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற பல்வேறு படங்கள் இயக்கியுள்ளார். அதில் விடுதலை திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது இவரது திரைப்படங்கள் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை தற்பொழுதும் வைத்திருக்கிறார் இவரது திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாக இல்லாவிடிலும் இவரது படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்துகின்றன. அந்தக் காரணத்தினால் டாப் நடிகர்கள் கூட இவரது கதைகளை கேட்க லைனில் காத்து இருக்கின்றனர்.
விடுதலை திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவுடன் முதல்முறையாக கைகோர்த்து வாடிவாசல் என்ற படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார் இதனால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் புதிதாக விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.இயக்குனர் வெற்றிமாறன் பிஎம்டபிள்யூ R NINE T என்ற பைக் வாங்கியுள்ளார் இதன் விலை மட்டுமே சுமார் 19 லட்சம் என கூறப்படுகிறது இயக்குனர் வெற்றிமாறன் பைக் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.