Director vetrimaaran said comedian vadivelu is the original actor after actor sivaji ganesan:கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வீட்டிலேயே முடங்கி உள்ள திரைப் பிரபலங்கள், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இவர்களது உடற்பயிற்சியாளர் பாசு சங்கர் மூவரும் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கலந்துரையாடலில் உடற்பயிற்சியாளர் பாசு சங்கர் அவர்கள் வெற்றிமாறனை பார்த்து உங்களுக்கு எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் கடந்த சில வருடங்களாக நான் வடிவேலு நகைச்சுவை தான் பார்க்கிறேன். எனக்கு நகைச்சுவை நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி அதிகமாக பார்ப்பேன்.
தற்போது தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் பார்க்க ஆரம்பித்துள்ளேன் என கூறியுள்ளார். அதுவும் தற்போது நெட் பிளக்ஸில் கேபர் நாம் என்ற லெபானியப் படத்தை பார்த்தேன்,நன்றாக இருந்தது என பதில் அளித்தார்.
மேலும் பாசு சங்கர் வடிவேலுவா, கவுண்டமணியா என கேள்வி எழுப்பினார். அதற்கு வெற்றிமாறன் அவர்கள் சிவாஜிகணேசனுக்கு பிறகு வடிவேலுதான் அசலான நடிகர் என நினைக்கிறேன் என்று பதிலளித்தார்.