Vijay vs Vetrimaaran: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விஜய்க்கு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ள நிலையில் அது குறித்த தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சமீப காலங்களாக தனது மக்கள் இயக்கத்தின் மூலம் ஏராளமானவர்களுக்கு தன்னால் முடிந்த நல தொண்டுகளை செய்து வருகிறார்.
எனவே இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றி விழா சமிபத்தில் சென்னை உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் இடம் அவரது அரசியல் குறித்து தொகுப்பாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் 2026 என தொகுப்பாளர்கள் கேட்டதற்கு 2025க்கு அடுத்த வருஷம் என நக்கலாக பதில் அளித்தார் விஜய். பின்னர் இன்னும் கொஞ்சம் யோசிங்க என தொகுப்பாளர்கள் கூற விஜய் 2026ல கால்பந்து உலகக்கோப்பை வருது என சொல்லி மீண்டும் கிண்டல் அடித்தார்.
எனவே சீரியசான பதில் வரலையே என தொகுப்பாளர்கள் கேட்டவுடன் கப்பு முக்கியம் பிகில் என ரசிகர்களை பார்த்து தான் அரசியல் வருவதை குறித்து சூசனமாக பதில் அளித்தார். இவருடைய பேச்சு வைரலாக இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும் அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அவர் கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். என்னை பொறுத்தவரை அரசியல் என்பது எல்லாருக்குமே சவாலான ஒன்றுதான் அதனை எதிர்கொள்ளும் மனம் பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.