அண்மைக்காலமாக தமிழ் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இப்பொழுது கூட இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்னும் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார்.
அதில் முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் காடு, மலை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி போலீசாக இந்த படத்தில் நடித்து வருகிறார் அதற்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் நிச்சயம் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வெற்றிமாறன் பார்த்து பார்த்து எழுது வருகிறார் அதுவும் இயற்கையோடு ஒன்றி வரும் அளவிற்கு காடு, மலைகளில் நடிகர் நடிகைகள் வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விடுதலை படத்தின் கதையை எழுதிவிட்டு படத்தின் சூட்டிங் தொடங்கும் பொழுது இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 4 கோடி தான் ஆனால் தற்பொழுது இந்த படத்தின் பட்ஜெட் தற்பொழுது 40 கோடியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.’
இவ்வாறு பட்ஜெட் அதிகரிக்க முக்கிய காரணம் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் அதிகமானாலும் விடுதலை படத்தை வெற்றிமாறன் பார்த்து பார்த்து செதுக்கி வருவதால் நிச்சயம் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ஒரு வெற்றி படம் லிஸ்ட்டில் இணையும் என தெரிய வருகிறது.