நடிகர் விஜயை குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு ஓபன் டாக்.! வைரலாகும் தகவல்..

vengat-prabu
vengat-prabu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் பல கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தினை வம்சி இயக்க தில்ராஜ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.  இவர்களை தொடர்ந்து குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்த பிறகு இவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான தளபதி 67 திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜயை குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ஓபனாக சில தகவலை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்,ஹோலிவிட் நடிகரான வில் ஸ்மித் படங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு விஜய் நினைவுக்கு வருவார், வில் ஸ்மித்  ஸ்டைலில் விஜயை வைத்து ஒரு படம் பண்ணனும் என்றும் விஜயின் ஸ்டார் அந்தஸ்து இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது எனவே அவருக்காக ஒரு வித்தியாசமான கதையை விரைவில் உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.