நீங்கள் செய்வது சட்டப்படி குற்றம்..! ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு..!

vengat-prabhu
vengat-prabhu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து சிறந்த கதாநாயகனாக வலம் வந்தாலும் பின்னர் இவருடைய அலட்சியத்தின் காரணமாக தமிழ் திரை உலகில் பின் தள்ளப்பட்டார்.

அதன் பிறகு அவர் செல்லும் இடமெல்லாம் சரவெடி வைத்தது போல இவரால் எந்த திரைப்படத்திலும் சரியாக நடக்கவும் முடியவில்லை அது மட்டுமில்லாமல் இவர் கதாநாயகனாக நடிப்பதற்கு தகுந்த உடல் அமைப்பும் இல்லாததன் காரணமாக பல இயக்குனர்களும் இவரை வைத்த திரைப்படம் இயக்குவதற்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் சுமார் பத்தாண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகர் சிம்பு மறுபடியும் திரையுலகில் கால் தடம் பதித்துள்ளார் அந்த வகையில் அவர் முதலில் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் தயாரித்திருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் சிம்புவுக்கு இத்திரைப்படம் ஒரு கம் பேக் திரைப் படமாக அமைந்துவிட்டது.

பொதுவாக சிம்பு திரைப்படத்தில் டயலாக்குகள் மற்றும் பில்டப் காட்சிகள் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் எந்த ஒரு அலட்டலும் வீண் பேச்சு இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.

மேலும் திரை அரங்கில் மாநாடு திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுப்பது மட்டுமின்றி அதனை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதற்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு நீங்கள் எங்களுக்கு காட்டும் அன்பிற்கு மிகவும் நன்றி ஆனால் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என வெங்கட் பிரபு கூறியதுமட்டுமில்லாமல் இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் கூறியுள்ளார்.