Thalapathy 68: தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்து ப்ரோமோஷன் பணிகளில் படக் குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி விஜய் தனது 68வது படத்தில் நடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தளபதி 68 படத்தில் நடிக்கப் போகும் பிரபலங்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சமீப காலங்களாக நடிகை சினேகா தளபதி 68 படத்தில் நடிக்க போவதாக தகவல் வைரலாகி வருகிறது.
எனவே இதற்கு குறித்து வெங்கட் பிரபு மறைமுகமான பதிவை வெளியிட தளபதி 68 படத்தில் சினேகா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கும் நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
லியோ படத்தில் ரிலீசுக்கு பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்பொழுது சினேகா தளபதி 68 இல் நடிக்க இருப்பதை தனது வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அதாவது, சினேகாவுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘Get Ready For a Fun Ride’ என்று பதிவு செய்துள்ளார். இவ்வாறு இதன் மூலம் சினேகா விஜய் 68ல் நடிப்பது உறுதி என சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.