நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வம்சி.!

vijay-vamchi
vijay-vamchi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது.

இதன் காரணமாக நடிகர் விஜயை தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என அழைத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய விஜய் இந்த படத்தின் மூலம் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இயக்குனர் வம்சி இதற்கு முன்பு தெலுங்கில் பிருந்தாவனம், எவடு, ஊப்பிரி, மகரிஷி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வருமா வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விஜய்யை யாராலும் அடிச்சுக்க முடியாது அவர் இத்தனை உயரங்களில் இருக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் நேர்மை, ஒழுக்கம், பேஷன் இந்த மூன்றும் அவரிடம் உள்ளது இந்த மூன்றும் ஒருவரிடத்தில் இருந்து விட்டால் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது.

அப்படிப்பட்டவர் தான் விஜய் அவர் மிகச்சிறந்த மனிதர் என்றும் வம்சி கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய உள்ளார் இந்த படம் ஆக்சன் நிறைந்த மாசான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.