தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் ஆர் சுந்தர்ராஜன். இவர் முதலில் “அன்று சிந்திய ரத்தம்” படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தார்.
ரஜினியை வைத்து ராஜாதி ராஜா, விஜயகாந்த் வைத்து அம்மன் கோயில் கிழக்காலே.. தழுவாத கைகள், மோகனை வைத்து குங்குமச்சிமிழ், மெல்ல திறந்தது கதவு என டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணினார் அந்த படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து வெற்றிகள் இயக்குனராக ஓடிக்கொண்டிருந்த இவர் குசேலன், சூர்யவம்சம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த இவர் வயது முதிர்வின் காரணமாக தற்போது சின்னத்திரை பக்கம் சீரியல்களில் நடித்து வருகிறார் அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில்..
அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து இல்லதரிசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறார் இப்படிப்பட்ட சுந்தர்ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மோகன் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஆர் சுந்தர்ராஜன் மைக் மோகன் வைத்து மெல்ல திறந்து கதவு படத்தை எடுத்தார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார் மேலும் அமலா, செந்தில் என பல திரைப்பட்டாங்கள் நடித்திருந்தனர்.
படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது இந்த படத்தின் சூட்டிங் போது மோகன் சுந்தர்ராஜனிடம் தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார் அதாவது இந்த படத்தில் தனக்கு ஒரே ஒரு சண்டைக் காட்சி வைக்க சொன்னாராம் உடனே சுந்தர்ராஜன் இந்த படம் முடியும்போது நீயும் நானுமே சண்டை போடுவோமா என தெரியவில்லை..
இதில் நீ சண்டைக் காட்சி கேட்கிறாயா.? எனக்கூறி அவர் ஆசையை நிராகரித்து விட்டார் மேலும் சண்டைக் காட்சி என்றால் அதில் நடிப்பவரின் கண்களில் ஒரு உணர்ச்சி இருக்க வேண்டும் ஆனால் மோகனின் கண்களில் அதை பார்க்க முடியாது என அதை நிராகரித்ததாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.