இயக்குனர் சுந்தர். சி -க்கு சொந்த ஊரில் இருக்கும் அழகிய வீட்டை பார்த்து உள்ளீர்களா? இதோ புகைப்படம்.!

sundar-c-and-kushboo
sundar-c-and-kushboo

சுந்தர் சி முதலில் மணிவண்ணன் இடம் உதவி இயக்குனராக இருந்து திறமையை வளர்த்துக் கொண்டு பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் அஜித் மாளவிகாவை வைத்து உன்னை தேடி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி அசத்தினார்.

அதேசமயம் படங்களிலும் நடித்து வெற்றியை கண்டார் சினிமா உலகில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் இருக்கின்றனர் அண்மைக்காலமாக நடிகர் சுந்தர் சி பேய் படங்களை எடுத்து அசத்தி வருகிறார்.

அந்த படங்கள் ஒவ்வொன்றுமே மிகப்பெரிய ஹிட் அடிக்கின்றன.இருப்பினும் அதே ட்ரக்கில் போய்க்கொண்டு இருந்தால் சுத்தப்பட்டு வராது என்பதற்காக தற்பொழுது தனது ரூட்டை மாற்றி காமெடி கலந்த படங்களை எடுக்க தொடங்கியுள்ளார். அதில் முதலாவதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வெகுவிரைவிலேயே வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா, சம்யுக்தா, யோகி பாபு, திவ்யதர்ஷினி, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகிறது

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சுந்தர் சி -க்கு சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நடிகர் சுந்தர் சி ஈரோடு மாவட்டம் பக்கத்தில் தான் பிறந்தார் அவரது வீட்டில் மனைவி குஷ்பு நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ.

kusboo
kusboo