நான் ஒன்னும் புரட்சி இயக்குனர் கிடையாது..! என்னுடைய திரைப்படம் இப்படி தான் இருக்கும் என இயக்குனர் சுந்தர் சி ஓப்பன் டாக்..!

sundhar-c-2
sundhar-c-2

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சுந்தர் சி இவர் சமீபத்தில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய பாகங்களை இயக்கி தற்போது மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்சி, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சாக்ஷி அகர்வால் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இத்திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி அவர்கள் வெளியிடவுள்ளார்.

ஒரு திரைப்படத்தை பல்வேறு பாகங்களாக எடுத்துக்கொண்டு சுந்தர் சி ஜாலியாக இருக்கிறார் என்று நினைப்பீர்கள் ஆனால் அப்படி கிடையாது  ஒரு திரைப்படத்தை புதிதாக இயக்கும் பொழுது அதில் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் இதனால் இத்திரைப்படம் வெற்றி பெற்றுவிடும் அதுவே ஒரே திரைப்படத்தை அடுத்த பகுதிக்கு கொண்டு செல்லும் பொழுது அதில் தொடர்ச்சி இருப்பது மட்டுமல்லாமல் புதிதாக பல்வேறு விஷயங்களை காண்பிக்க வேண்டும்.

அந்த வகையில் எனக்கு நல்ல லாபம் கொடுத்தது திரைப்படம் அரண்மனை இத்திரைப்படத்தை அடுத்த பாகம் எடுக்கும் பொழுது எனக்கு நல்ல நடிகர் வேண்டும் என நினைத்த நிலையில் எனக்கு சிறந்த நடிகர்கள் கிடைத்துள்ளார் அந்த வகையில் இவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு ஓடாமல் படம் வெளியேறும் வரை கூடவே இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விவேக் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் அடிக்கடி என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என நிறைய அட்வைஸ் செய்வார் ஆனால் கடைசியில் இவருக்கு எப்படி ஆனதுமட்டுமல்லாமல் என்னுடைய திரைப்படம் இவர்கள் கடைசி படமாக அமைந்துவிட்டது.

aranmanai-3
aranmanai-3

அதுமட்டுமில்லாமல் நான் ஒரு சிம்பிளான டைரக்டர் தான் என்னிடம் மக்களுக்கு அறிவுரை செய்யும் அளவிற்கு புரட்சியான கருத்துக்கள் எதுவும் கிடையாது. மேலும் என்னுடைய திரைப்படங்கள் சுமார் 2 மணி நேரம் ரசிகர்களை சிரித்து மகிழ வைக்கும் அளவில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த மூன்றாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என சுந்தர் சி கோரியுள்ளார்.