director sudha kongara latest speech: இதுவரை பல ஆண் இயக்குனர்கள் திரையுலகில் சாதித்தாலும் முதன் முதலாக தனியாக நின்று சாதித்து காட்டிய பெண் இயக்குனர் தான் சுதா கொங்கரா. இந்நிலையில் இவர் எடுத்த அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றதன் காரணமாக தற்போது ஆஸ்காருக்கு செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவர் தமிழில் பல திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் முதலில் அறிமுகமானது என்னவோ தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான். இதை தொடர்ந்து தமிழில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த துரோகி எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார்.
இவ்வாறு இவர் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் இவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் இதற்காக அவர் தன்னுடைய மனதை தளரவிடாமல் மீண்டும் 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் ஹிந்தியிலும் வெளியானது. மேலும் இந்த திரைப்படம் வெளிவந்ததன் பிறகாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் உள்ள திரைப்படங்கள் பல திரைப்படங்கள் திரைக்கு வந்தன.
சொல்லப்போனால் தமிழ் சினிமாவையே மாற்றி அமைத்தது என்றால் அது சுதா கொங்கரா தான். இந்த திரைப்படத்தில் வெகுநாள் கழித்து மாதவன் நடித்து இருந்தார் மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக அவருக்கு மறுபடியும் சினிமாவில் கவனமாக இருக்க ஒரு வாய்ப்பும் கிடைத்து விட்டது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சூர்யாவை வைத்து சூரரை போற்று எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெளுத்து வாங்கி விட்டது.
தொடர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கும் சுதா கொங்கரா விடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு பதிலளித்த நமது இயக்குனர் ஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்த தமிழ் சினிமாவில் எவ்வளவு தோல்வியை சந்திக்கிறோம அனைத்துமே நமக்கு சாதகம் தான்.
அதுமட்டுமில்லாமல் வெற்றி கிடைத்து விட்டால் அதை தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவே தோல்வியை சந்தித்தால் பயந்து ஓடி விடவும் கூடாது என வீர தமிழச்சி போல சுதா கொங்கரா பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதன் மூலமாக பல பெண் இயக்குனர்களும் மிக ஆர்வத்துடன் திரைப்படம் இயக்க முன் வந்துள்ளார்கள் மேலும் சமீபத்தில் தல அஜித்தை வைத்து சுதா கொங்கரா ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளாராம்.
இவ்வாறு தல அஜித் முதல் முதலாக இவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.