சுதா கோங்காரா இயக்குனராக மட்டுமில்லாமால் படத்திலும் நடித்துள்ளாரா.! இதோ புகைப்படத்துடன் ஆதாரம்.

sudha-konarav-tamil360newz
sudha-konarav-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பெண் இயக்குனர்கள் வெகுசிலரே அதில் முதன்மையானவர் சுதா கொங்காரா. இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி கொண்டிருக்கும் பெண் இயக்குனர் இவர் துரோகி என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மாதவன் நடிப்பில் 2010 ஆண்டு வெளிவந்த இறுதிச்சுற்று என்ற படத்தையும் இயக்கியிருந்தார் இப்படம் திரைஅரங்கில் வெளிவந்த நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லமால் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு சாதனை படைத்தது இதனை தொடர்ந்து அவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்று தள்ளி போய் உள்ளது. இதனை தொடர்ந்து அவர் முன்னணி நடிகரை வைத்து இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது இருப்பினும் அந்த முன்னணி நடிகர் யார் என்றே தெரியாத அளவிற்கு மறைத்துள்ளார் சுதா கொங்காரா. 

சுதா கொங்காரா அவர்கள் இயக்குனராக பல படங்களை இயக்கியிருந்தாலும் சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு முன்பாக திரையில் தோன்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 2005 ஆம் ஆண்டு  பிரியா இயக்கத்தில் வெளிவந்த கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

sudha kongarav
sudha kongarav