இயக்குனர்கள் கதை சொல்வது பிடிக்கவில்லை என்றால் நான் இதை தான் செய்வேன்..! ஒரு படத்துக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்..!

ashwin-1
ashwin-1

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஸ்வின் இவர் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆனார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பல திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவை எந்த திரைப்படங்களும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆல்பம் சாங் வெப் சீரியஸ் என பல்வேறு வகையில் தன்னுடைய முகத்தை ரசிகர்களிடையே காட்டிய அஸ்வின் சமீபத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரிஹரன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திரைப்படத்தில் காதல் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் பல சுவாரசியமான விஷயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் இதுவரை நான் 40 கதைகள் கேட்டுள்ளேன் அந்தவகையில் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் உடனே நான் தூங்கி விடுவேன்.

ashwin-1
ashwin-1

இதில் நான் தூங்காமல் ஒரு கதை கேட்டது என்றால் அது என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தின் கதை தான் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து யோசித்து அதன் பிறகு செய்துள்ளோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கும் இயக்குனருக்கும் அடிக்கடி சண்டை வருவது மட்டுமில்லாமல் படம் நல்லா இல்லை என்றால் படத்தை வெளியிட மாட்டேன் என அடிக்கடி கூறுவேன் என்று அவரே கூறியுள்ளார்.