படத்தில் நடித்துள்ள சிறுத்தை சிவா.! ரசிகர்களின் கண்களில் பட்ட காட்சி சும்மா விடுவார்களா என்ன.! புகைப்படம் உள்ளே.

siva
siva

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.இவர் இதற்க்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் உடன் இணைந்து தொடர்ந்து 4 படங்களை இயக்கி வெற்றி கண்டதன் மூலம் தமிழ் சினிமாவில் வெகுவிரைவிலேயே பிரபலமான இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டார்.

இவர் தல அஜித் அவர்களை வைத்து வீரம் ,வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய தமிழ் சினிமா உலகிற்கு பிரபலப்படுத்தி கொண்டார் அஜித்தை வைத்து இயக்க அதற்கு முன்பாக கார்த்திக்குடன் இணைந்து 2011ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இத்திரைப்படம் திரையரங்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

siva
siva

சிறுத்தை சிவா இயக்குனராக மட்டும் தன்னை சினிமா உலகில் அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் நடிகராகவும் தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்தியுள்ளார் அந்தவகையில் இவர் பிரபுதேவா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் இவர் நடித்த காட்சிகளின் புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த பலரும் இது சிறுத்தை சிவா வா என வியந்து போய் பார்த்து வருகின்றனர்.

siva
siva