இயக்குனர் சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நேரம் அவருக்கு எல்லாமே வெற்றிகரமாகவே அமைகின்றன. மேலும் உச்ச நட்சத்திரங்களை வைத்து தான் இதுவரை படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா தமிழில் முதலில் நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை என்னும் ஆக்சன் படத்தை முடித்திருந்தார்.
இந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை ருசித்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ரஜினி அஜித் ஆகியோர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கி உள்ளார் அந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.
அந்த வகையில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படங்கள் அஜித்துக்கும் சிறந்த படங்களாக அமைந்தன.அஜித்தை தொடர்ந்து ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற பிளாக்பஸ்டர் படத்தையும் அண்மையில் கொடுத்திருந்தார் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவில் இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் படங்கள் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறுத்தை சிவா ஒரு பதிவை போட்டு அஜித்திற்கும் அஜித் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியது.
சாய் சாய்.. ஜனவரி 10 வீரம், விசுவாசம் ஆகிய படங்கள் எனக்கு பெரிய ஆசீர்வாதமாக வந்தவை. அஜித் சார் ரசிகர்கள் மீடியா நண்பர்கள் சினிமா லவ்வர்ஸ் மற்றும் குடும்ப ரசிகர்கள் என ட்வீட் போட்டு உள்ளார் இதற்கு ரசிகர்களும் லைக்குகளையும், கமெண்டுகளையும் கொடுத்து அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய பதிவை..