அந்நியன் படத்தில் இயக்குனர் சங்கர் செய்த தவறு!! மீம்ஸ் போட்டு கலாயித்த ரசிகர்!! இதோ அந்த புகைப்படம்!!

Director Shankar’s  Anniyan movie memes: இந்தியாவில் முன்னனி இயக்குனராக வளம் வருபவர் சங்கர். மேலும் இவர் திரைக்கதை ஆசிரியர், திரை படத்தொகுப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற அனைத்து மொழிகளும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். இவரது படங்களுக்கு பல கோடி செலவிடப் பட்டு பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படங்கள் எடுக்கப்படும் என்பதை அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் அந்நியன் பெரும்தொகை செலவிடப்பட்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். முதலில் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்க ஆரம்பித்தனர். இதனைத்தொடர்ந்து பின்னர் பிரஞ்ச், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இந்தத் திரைப்படமே பிரெஞ்சில் வெளிவந்த முதல் இந்திய திரைப்படம் ஆகும்.

anniyan23-tamil360newz
anniyan23-tamil360newz

இந்த திரைப்படத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், சதா, விவேக் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் போன்ற மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அந்நியன் ஆக வந்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பார்.

anniyan12-tamil360newz
anniyan12-tamil360newz

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பான அந்நியன் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைரக்டர் சங்கரை கலாய்த்து மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் லட்ச கணக்கில் வரி செலுத்தாத நந்தினியை விட்டுவிட்டு அப்பாவியாக பார்கில் படுத்திருக்கும் சார்லிய கொலை பண்ணிட்டீங்களே என்னப்பா காரணம் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அந்த மீம்ஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.