கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்.! அதுவும் இந்த பிரபல முன்னணி நடிகருடன்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

shankar
shankar

பல கோடி பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர் என்றால் அது தமிழில் இயக்குனர் ஷங்கர் மட்டும் தான் இவர் தமிழ் திரையுலகில் நிறைய ஹிட் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கொடுத்து மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழ் திரை உலகில் பணியாற்றி வரும் பல முன்னணி நடிகர்களை வைத்து.ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து மிகவும் உச்ச நட்சத்திரமாக தற்பொழுது விளங்கி வருகிறார்.இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அனைவருமே பார்த்திராத காட்சிகளை மட்டும் தான் தனது திரைப்படத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஷங்கர் பல கோடி பட்ஜெட்டில் படங்கள் எடுத்து வருகிறார்.மேலும் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது மண்டபத்திற்கு மட்டுமே ஷங்கர் பல கோடி செலவு செய்ததாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தமிழ் திரையுலகில் நடிக்க அறிமுகமாக இருக்கிறார் ஆம் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது கிடைத்துள்ளது அதாவது நடிகர் கார்த்தியின் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் மகள் நடிக்க வருவதால் இவருக்கு நாங்கள் நல்ல வரவேற்பு தருவோம் எனவும் இவர் நடிக்கும் இந்த விருமன் திரைப்படம் இவருக்கு கை கொடுக்கும் எனவும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் கார்த்திக்கும் நல்ல வரவேற்பு தரும் என இவரது ரசிகர்கள் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.