தமிழ் திரையுலகை பொருத்தவரை மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்த பல பிரபலங்களும் தற்பொழுது தமிழில் நடிக்க மிகவும் ஆவலுடன் பங்கேற்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம் தமிழில் நடித்தால் இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உடனே உருவாகிக் கொண்டே போகிறது.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சரண்ராஜ் என்பவர் இவர் 90 காலகட்டங்களில் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ தனது முகத்தை பதிய வைத்தார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாக வலம் வந்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால் இவர் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா போன்ற ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவ்வாறு பார்த்தால் இவர் தமிழில் வந்தவுடன் இவருக்கு ரசிகர்களும் நன்றாக வரவேற்பு தந்தார்கள் மேலும் இவர் பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்து இருப்பார் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி தான் நடிக்க வேண்டுமாம் ஆனால் அவரால் நடக்காமல் போன நிலையில் தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இவர் கூறியது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த பேட்டியில் இவர் பல திடுக்கிடும் தகவல்களையும் கூறியுள்ளார் அதாவது நான் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு படிப்படியாகத்தான் முன்னேறி வந்தேன் அதேபோல்தான் பல இயக்குனர்களும் உதவி இயக்குனர்களாக இருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் கூற வேண்டுமென்றால் எஸ்.ஏ சந்திரசேகர் சார் கிட்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
அப்படி இருக்கும் நிலைமையில் எஸ்.ஏ சந்திரசேகர் சார் கிட்ட இயக்குனர் சங்கர் நிறைய அடிவாங்கி அழுதிருக்கிறார் ஆனால் இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பாராட்ட கூடிய இயக்குனராக வலம் வருகிறார் எனவும் நடிகர் சரன் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளாராம்.