கேஜிஎப் 2 படத்தில் “பெரியம்மா” காட்சியை பார்த்து மிரண்ட இயக்குனர் ஷங்கர்.! வைரலாகும் பதிவு.

KGF-
KGF-

அண்மைக்காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் போட்ட காசையும் தாண்டி கோடிகணக்கில் வசூலித்து புதிய சாதனை படைக்கிறது. அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 தொடர்ந்து இப்பொழுது RRR என்ன படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்திருந்தார்.

இந்த படமும் ஆயிரம் கோடி வசூல் செய்தது அதனைத் தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கே ஜி எஃப் 2 படம் 550 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட்டது. இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை ஆக்ஷன், சென்டிமென்ட்,  மாஸ் சீன்கள் என அனைத்தும் கலந்து எடுத்திருந்தார்.

படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பராக ஓடியது. இதன் மூலம் படக்குழு எதிர்பார்க்காத  வசூல். அதாவது சுமார் 1100 கோடிக்கு மேல் வசூலில் புதிய சாதனை படைத்தது. இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டித் தள்ளினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தை பார்த்து மிரண்டு போனாராம் மேலும் சில பதிவுகளையும் போட்டு அசத்தியுள்ளார் அதில் அவர் சொன்னது.

படத்தில் நடிகர் தொடங்கி பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர்கள் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக பெரியம்மா காட்சியை வேற லெவல் என குறிப்பிட்டு அசத்தினார்.  நிச்சயம் கே ஜி எஃப் 2 மாஸ் படம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என மறைமுகமாக கூறி உள்ளார்.