ஷங்கர் சார்.. அதிதியை காதலிக்கிறேன்.! அவரைப் பார்க்கத்தான் வந்தேன் – பிரபல காமெடி நடிகர் பேட்டி.!

aditi-shankar
aditi-shankar

முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் விருமன். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. விருமன் திரைப்படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி சங்கர், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சிங்கம் புலி, சூரி, மைனா நந்தினி, ராஜ்கிரன், கருணாஸ், ராஜ்குமார், வடிவுக்கரசி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி காதல் என அனைத்தும் கலந்து இருந்ததால் அனைவருக்கும் பிடித்துள்ளது. படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்து வருவதால் நிச்சயம் விருமன் படத்தை காண  அடுத்த அடுத்த நாட்களில் திரையரங்கில் இன்னும் கூட்டம் அதிகரிப்பதோடு நல்ல வசூலை அள்ளும் என தெரிய வருகிறது.

இதனால் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. மேலும் அதிதி சங்கரும் கார்த்தியும் சந்தோஷத்தில் மிதக்கின்றனர். அந்த அளவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் வெளியே வந்து விமர்சனம் கொடுத்து உள்ளார் அதில் அவர் சொன்னது. பிரம்மாண்ட இயக்குனரின் மகளை பார்க்கத்தான் வந்தேன் மாமனார் ஷங்கர் மகள் அதிதியை காதலிக்கிறேன்.

cool suresh
cool suresh

நீங்கள் பெரிய இடம் நான் ஏழை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷனர் அலுவலகம் செல்வேன் என பதாகை ஒன்றை காட்டி நகைச்சுவையாக கூறி உள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.