அண்மையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் சென்ற மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன. மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷின் படம் திரையரங்கில் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பல பிரபலங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் இவர் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் செம்ம ட்ரெண்ட் ஆகின.
இந்த படத்தில் தனுஷுக்கு மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் நித்யா மேனனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டன. சன் பிக்சர் நிறுவனம் தயாரித்த திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்த சில நாட்களிலேயே பல கோடி வசூலை ஈட்டிய நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு அண்மையில் கேக் வெட்டி கொண்டாடியது. மேலும் திருச்சிற்றம்பலம் படம் இதற்கு முன் வெளிவந்த பல டாப் நடிகர்களின் படத்தின் வசூலையும் பல இடங்களில் முந்தி உள்ளது.
அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருப்பதால் இன்றும் திரையரங்கில் இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்களும் பட குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் சங்கர் திருச்சிற்றம்பலம் படம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் இப்படி ஒரு படத்தை சமீபத்தில் நான் பார்த்ததில்லை. இந்த படம் ஒரு அழகான படம். படத்தில் நித்யா மேனனின் நடிப்பு மிகவும் சிறப்பு மற்றும் பாரதிராஜா பிரகாஷ்ராஜ் என பலரும் சிறப்பாக நடித்திருந்தனர் என்று கூறி பட குழுவிற்கும் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவகருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு