இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்தை எடுக்க போவது என்னமோ 2022 – ல் தான்.. இப்போதே ஹீரோவை புக் பண்ணிவிட்டார்…! யார் அந்த நடிகர் தெரியுமா.?

shankar
shankar

திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் கூட மிகப்பெரிய உச்சத்தை தொட முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் குறைந்த திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் சங்கர். இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதால் இவரது படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதோடு கதையம்சமும் சிறப்பாக இருப்பதால் இந்திய அளவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தற்போது பார்க்கப் படுகிறார்.

இவர் கடைசியாக இந்தியன் 2 என்ற திரைப்படத்தை கமலை வைத்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் சிறப்பாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட ஷூட்டிங்கில் சில விபத்துகள் ஏற்பட்டாதால் படம் முற்றிலும் டிராப் ஆனது.

தற்போது இந்த திரைப்படத்தை இயக்க ஷங்கரும் கமலும் தற்பொழுது ஒத்துழைக்காமல் ஆளுக்கு ஒரு திசையில் பயணித்துக் கொண்டு வருகின்றனர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஷங்கர் அடுத்த படத்தை நோக்கி தற்பொழுது பயணித்து வருகிறார்.

இவர் மிகப்பெரிய பொருட்செலவில் 2022ஆம் ஆண்டு ஒரு புதிய படத்தை தொடங்க உள்ளார். இத்திரைப்படத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி நடிகர்களையும் இந்த படத்தில் களமிறங்க உள்ளாராம். முதலில் கன்னட நடிகர் யாஷ் படத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

yaash
yaash