தமிழ் சினிமாவுக்கு ஒரேடியாக கும்பிடு போட்ட இயக்குனர் சங்கர்..! கடும் கோபத்தில் முன்னாடி நடிகர்கள்..!

shankar-01
shankar-01

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்கள் போற்றி வரும் ஒரு இயக்குனர் தான் சங்கர் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகுவது மட்டுமில்லாமல் மிக நவீன கருவிகளை உபயோகப்படுத்தி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2.0 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது  இவர் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கலாம் என ஆரம்பித்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரச்சனைகள் உருவானதும் காரணமாக திரைப்படம் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நமது இயக்குனர் தற்பொழுது தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட தெலுங்கு திரை உலகில் அதிக அளவு எதிர்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் நமது இயக்குனர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமா இயக்க சென்றது பலருக்கும் கோபத்தை மூட்டி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் மீண்டும் வந்து விடுவார் என நினைத்த நிலையில் அவரோ தமிழ் நமக்கு செட்டாகாது என ஹிந்தி திரைப்படத்தின் பக்கம் சென்று விட்டார். மேலும் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தன்னுடைய கனவு திரைப்படத்தை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது இவருடைய கனவு திரைப்படம் என்பது நீருக்கு அடியில் ஒரு அறிவியல் சார்ந்த திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் ஆசை அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண், ஷாருக்கான், கிருத்திக் ரோஷன்  போன்றவர்களை நடிக்க வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழ் சினிமாவை மதிக்காமல் போன சங்கர் தற்பொழுது தமிழ் நடிகர்களையும் மதிக்காமல் வேறு மொழி நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைப்பதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை வேறு மொழியில் எடுக்கப் போவதாக தெரியவந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் கூட இடம் பெறுவாரா என்பது சந்தேகம் தான். இவ்வாறு தமிழ் சினிமாவை வேண்டாம் என சங்கர் நிறுத்துவதற்கு காரணம் என்னவாக  இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.