பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதன் முதலாக ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? முதல் திரைப்படத்திலேயே இவ்வளவா.?

Director-Shankar
Director-Shankar

director shankar 1st salary for gentleman movie: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர், இவர் திரைப்படத்தை காண்பதற்காகவே ரசிகர் கூட்டம் அலைமோதும்.

அதேபோல் தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு பிரமாண்டத்தை காட்ட வேண்டுமென அதிக முயற்சி எடுப்பார். அப்படி தான் பல திரைப்படங்களில் பிரமாண்டத்தை காட்டியுள்ளார்.

குறைந்த திரைப்படங்களை இயக்கி வந்தாலும் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர்,  இவர் முதன் முதலில்1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு காதலன், இந்தியன், எந்திரன் என பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். இயக்குனர் ஷங்கரை தமிழ் சினிமாவில் தூக்கி விட்டவர்களை மிக முக்கிய பங்கு என்றால் தயாரிப்பாளர் குஞ்சு மோகனுக்கு தான் அதிக பங்கு.

ஏனென்றால் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தை தயாரித்தவர் இவர்தான்,  அப்பொழுது ஜென்டில்மேன் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக அமைந்தது,இந்த மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்குனர் சங்கரை நம்பி குஞ்சு மோகன் தயாரிப்பாளர் இறங்கினார் அதற்கு காரணம் இவர்களின் பழக்க வழக்கம்தான்.

அதுமட்டுமில்லாமல் இவ்விருவரும் இணைந்து பல திரைப் படங்களில் பணியாற்றியுள்ளார்,  மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ஜெண்டில்மேன் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நவரச நாயகன் கார்த்திக் தான், ஆனால் கார்த்தி ஒரு வருடம் கழித்து இந்த திரைப்படத்தை எடுக்கலாம் என கூறினார்.

அதற்குப் முடியாது உடனே எடுத்தாக வேண்டும் என்று அர்ஜுனை அணுகினார்கள், அதனை அடுத்து இந்த திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கொடுத்தார் இயக்குனர் சங்கர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை முன்னிட்டு இயக்குனர்  சங்கருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் திரைப படத்தை இயக்குவதற்கு முன்பு சிறிய வீட்டில் தான் சங்கர் குடியேறினார் ஆனால் திரைப்படம் ஹிட் அடைந்ததை அடுத்து பெரிய பிளாட் அவருக்கு கிடைத்தது,  மேலும் மாருதி 800 கார் கிடைத்தது. இத்தனையும் ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்கியதற்காக தான் கிடைத்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.