கீழ்த்தரமாக நடந்து கொண்ட மாணவர்களை எச்சரித்த விஜயகாந்த்.! படப்பிடிப்பில் நடந்த கலாட்டா

vijayakanth
vijayakanth

Actor Vijayakanth: நடிகராகவும், அரசியல்வாதியாகவும் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் விஜயகாந்த் தற்பொழுது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவருடைய புகழ் தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. விஜயகாந்த் செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

எனவே இந்த படத்தின் மூலம் செந்தில் நாதன், விஜயகாந்த் இருவருக்கும் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. அப்படி விஜயகாந்தின் 71வது பிறந்த நாளான இன்று இவருடைய பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் சில விஷயங்களை செந்தில்நாதன் தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

அதாவது, பூந்தோட்ட காவல்காரன் படத்தில் என் உயிரே என்ற பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு பின்னாடி ஆடும் டான்ஸர்கள் குட்டை பாவாடை போட்டு நடனம் ஆடினார்களாம். இந்தப் படப்பிடிப்பு நடக்கும் பக்கத்தில் கல்லூரியும் இருந்துள்ளது. எனவே டான்சர்களை பார்த்ததும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து கிண்டல் செய்து தவறாக பேசிய உள்ளார்கள்.

எனவே இது குறித்து டான்சர்கள் விஜயகாந்திடம் சொல்ல அவர் மாணவர்களை எச்சரித்து அனுப்பினாராம். பிறகு படப்பிடிப்பு முடித்தவுடன் காரில் டிரைவர், இயக்குனர் செந்தில்நாதன், நடிகர் லிவிங் ஸ்டார் ஆகியோர் வந்து கொண்டிருக்க அப்பொழுது தொலைதூரத்தில் சில பேர் கையில் சைக்கிள் செயின், கம்பு போன்றவற்றை வைத்துக்கொண்டு நின்றுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களால் தப்பிக்க முடியாத காரணத்தினால் காரில் இருந்த லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மூன்று பேரையும் தாக்கிய உள்ளார்கள். எனவே இது தெரிந்தவுடன் விஜயகாந்த் நேயராக போலீஸ்சிடம் சென்று புகார் அளித்துள்ளார். போலீசர்களும் உடனே இது குறித்து விசாரித்து கல்லூரி மாணவர்களை பிரித்து பிடித்துள்ளனர். அதன் பிறகு பெற்றோர்களை வரவைத்து மாணவர்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாராம் கேப்டன் விஜயகாந்த்.