மண்டைய பிச்சுகிட்டு கதை எழுதுறது இதுதான்.. புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய செல்வராகவன்

selvaragavan
selvaragavan

சினிமா உலகில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் டக்குன்னு படத்தை எடுத்து காசு பார்க்கின்றனர் ஆனால் ஒரு சிலர் மட்டுமே சிறப்பான கதையை எழுதி விருதை வாங்குவார்கள் அந்த வகையில்  இயக்குனர் செல்வராகவன் படங்களை பொறுமையாக எடுத்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும், மேலும் விருதுகளை அள்ளி குவிக்கும்.

இதனால் செல்வராகவனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. செல்வராகவன் முதலில் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சம் மறப்பதில்லை கடைசியாக தனுஷை வைத்து நானே வருவேன் என்னும் படத்தை இயக்கி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் இயக்குனராக வெற்றி கண்ட செல்வராகவன் தற்பொழுது தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் பல படங்களில் கமிட் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறார்.

தற்பொழுது மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகசூரன்  திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். இந்த படத்தை செல்வராகவன் ரசிகர்கள்  பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் செல்வராகவன் அவ்வபொழுது தனது சோசியல் மீடியாவில் சில தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

அதுபோல தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு “மண்டைய பிச்சிகிட்டு கதை எழுதுறது” இதுதான் என கூறி உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள்  சீக்கிரம் அந்த கதையை எழுதி முடியுங்கள் நாங்கள் அதை படமாக பார்க்க விரும்புகிறோம் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படம் மற்றும் பதிவை நீங்களே பாருங்கள்.