பரத், தனுஷ், அஜித் நடிக்க இருந்த படத்தினை தூசி தட்டும் பிரபல இயக்குனர்.! மல்டி ஸ்டார்ஸ் இணையும் படம்..

ajith
ajith

Director Selvaraghavan: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனவே அந்த சமயத்தில் இந்த படத்தினை பாராட்டி வந்த நிலையில் ரிலீஸ் இருக்கு பிறகு படும் தோல்வியினை அடைந்தது.

இவ்வாறு இரண்டாம் உலகம் படத்திற்கு முன்பு செல்வராகவன் மல்டி ஸ்டார் படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டாராம். எனவே அதற்காக சில நடிகர்களை நடிக்க வைக்கலா என செல்வராகவன் முடிவு செய்திருந்தார். அந்த வகையில் அந்த படத்தில் அஜித், தனுஷ், பரத் ஆகியவர்கள் நடிக்க இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகம் படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு இந்த படம் கைவிடப்பட்டது.

எனவே இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் அப்படியே நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது செல்வராகவன் மீண்டும் மல்டி ஸ்டார் படத்தினை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தனுஷ் செல்வராகவனிடம் இந்த கதையை மீண்டும் ரெடி செய்து படத்தை எடுக்கலாம் என கூறி இருக்கிறாராம். ஆனால் இந்த படத்தில் அஜித்துக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் மல்டி ஸ்டார்ஸ் இணைந்து நடிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான நானே வருவேன் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் இப்படத்தின் மூலம் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது இவ்வாறு கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.