அண்ணன் தம்பிகளாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் தான் தனுஷ் மற்றும் செல்வராகவன். தனுஷ் நடிக்க அந்த படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்க இவர்களுடைய சகோதர கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. மேலும் இவர்களுடைய திரைப்படங்களும் மிகவும் புகழ்பெற்ற நிலையில் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.
பொதுவாக செல்வராகவன் சிறந்த கதையும் உள்ள படத்தினை இயக்கி வருகிறார் மேலும் அவருடைய படத்தில் நடிக்கும் பொழுது கண் அசைக்காமல் இருக்க வேண்டும் என அனைவரிடமும் கூறுவார். எனவே இவருடைய படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் பெரும்பாலான காட்சிகளில் கண்ணை இமைக்காமல் மிகவும் தத்துரூபமாக நடிக்க வேண்டும் என கூறுவாராம் இதனை பலரும் தங்களுடைய பேட்டியில் கூறியிருந்தனர்.
அந்த வகையில் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிறகு புதுக்கோட்டை திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார். இந்த படம் தான் இவர்களுக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பினை பெற்று தந்தது அதன் பிறகு இவர்களுடைய கூட்டணியில் யாரடி மோகினி, மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியினை பெற்றது.
இவ்வாறு இதன் பிறகு இவர்களுடைய கூட்டணியில் எந்த படமும் உருவாகாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தினை செல்வராகவன் இயக்க தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இவ்வாறு இந்த படமும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்ததாக இவர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது செல்வராகவன் ஹீரோவாக நடித்திருக்கும் பகாசூரன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் செல்வராகவனிடம் ஹீரோவாக நடிக்க வந்துள்ள செல்வராகவன் நடிப்பில் தனுஷின் நடிப்பு சாயல் இருக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் நாங்கள் இருவரும் நிறைய வேலை பார்த்து விட்டோம், அதனால் அது இருக்கலாம் கொஞ்சம் கொஞ்சம், ஏனென்றால் அவர் என்னிடமிருந்து என் எண்ணத்தை வெளிக்கொண்டு நடித்தவர்.
அதனால் தற்பொழுது அவர் நடிப்பிலிருந்து என்னுடைய நடிப்பு ஒத்துப் போவது கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றார். பிறகு தனுஷ் உடன் நடிப்பு குறித்து பேசி இவர் நாங்கள் பொதுவாக பெரிசாக எதுவும் பேசினது இல்ல அதுதான் நிஜம் அதையும் தாண்டி இன்னிக்கு இரவு என்ன, செய்ற சாப்பாடு வந்துடுச்சா, உங்க வீட்ல என்ன ஸ்பெஷல் என்று இவ்வளவுதான் இருக்கும் வேற எதுவும் பேசினது இல்ல ஆரம்பத்தில் இருந்தே நாங்க ஒரு விஷயத்துல தெளிவா இருக்கோம் அவங்க அவங்க வழியில் விட்டுவிடுவோம், அவர் அவரா இருப்பார் நான் நானாக இருப்பேன், அதனால் பெரிய அளவு உரையாடல் எங்களுக்குள் நடந்தது இல்லை என்றார்.