தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தியை சொன்ன இயக்குனர் செல்வராகவன்.! காரணம் தனுஷின் புதுபேட்டை படம் தான்.?

dhanush
dhanush

சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி அதில் தனது வெற்றியை பதிப்பது சாதாரண விஷயம் அல்ல ஏனென்றால் ஒரு கமர்ஷியல் படத்தை ஹிட் படமாக கொடுக்க முடியும் ஏனென்றால் கமர்சியல் படம் குடும்பங்களை வெகுவாக கவர்ந்து விடும் ஆனால் மாறுபட்ட வித்தியாசமான திரைப்படங்கள் மக்களை கவர்வது கஷ்டமான விஷயம்.

அந்த படம் சிறப்பாக இருந்தால் அந்த திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடிக்கும் என்பதுதான் உண்மை அதற்கு பெயர் போன அவர் தற்போது வரையிலும் இருந்து வருபவர் இயக்குனர் செல்வரகவன். செல்வராகவன் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஆரம்பித்து அதன் பிறகு மாறுபட்ட கதை களங்களை எடுக்க தொடங்கியுள்ளார் அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து உள்ளது.

இப்படி இருக்க இவரது இயகத்தில் மாறுப்பட்ட படம் புதுப்பேட்டை. இந்த  படத்தை தற்போது செல்வராகவன் மற்றும் படக்குழு கொண்டாடி வருகின்றனர் அதற்கு காரணம் இந்த படம் வெளியாகி இத்துடன் 15 வருடங்கள் ஆகியுள்ளது அதனை சமூக வலைதளத்தின் மூலம் படக்குழுவினர் பகிர்ந்து தனது அனுபவங்களையும் கூறி வருவதோடு கொண்டாடியும் வருகின்றனர்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் இவர்களுடன் இணைந்து சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தனர் அதிலும் குறிப்பாக தனுஷின் நடிப்பு வேற லெவல் இருந்தது.

puthupettai
puthupettai

மேலும் செல்வராகவனுக்கும் இந்த திரைப்படம் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது இந்த நிலையில் இப்படத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு செல்வராகவனின் அடுத்த படத்திற்கான ஒரு ஹின்ட்டையும் கூறி உள்ளார். இந்த கூட்டணி அடுத்த பயணத்தை தொடங்கயுள்ளது எனவும் கூறியுள்ளார்.