இயக்குனர் சங்கர் அதிரடி பேட்டி முதல்வன் 2 படத்தில் தல அஜித் தான் ஹீரோவா.

shankar-ajith
shankar-ajith

அர்ஜுன் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் முதல்வன். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். அதன்மூலம் அர்ஜுனுக்கும் சங்கருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சங்கர் அவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது செய்தியாளர்கள் முதல்வன் 2 படத்தை எப்போது எடுக்க உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்கள், அதற்கு சங்கர் அவர்கள் இந்தியன்2 முடிந்ததும் எடுக்க உள்ளதாக கூறினார்.

ஹீரோ யார் என்று செய்தியாளர் கேட்ட பொழுது, அதற்கு சங்கர் அவர்கள் அஜித்தை வைத்து முதல்வன் 2 படத்தை எடுப்பது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார். ஆனால் அஜித் அதற்கு சம்மதிப்பாரா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மேலும் இதில் விக்ரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இருந்தாலும் இப்படி ஒரு கூட்டணி இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

shankar-ajith

ஏனென்றால் அஜித் தற்போது நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் முதல்வன் 2 நல்ல கதை உள்ள படமாகவே இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர். அஜித்தின் படம் அனைத்தும் ஏதேனும் நல்ல செய்தியுடன் மக்களை சென்றடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.