நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நடன இயக்குனர் சாண்டி. இவருடைய நடிப்பு திறமை ரசிகர்களால் கவரப்பட்ட நிலையில் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது மேலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும நடுவராக பணியாற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க கமலஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் அனிருத் இன் இசையமைக்க உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தினை வெளியிட்டது.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மரண மாஸ் குத்து பாடல் தான் ‘பத்து தல’ இந்த பாடலில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் தன்னுடைய குரலில் பாடி நடனமாடி இருந்தார்.
மேலும் பெரிதாக நடனமாடவில்லை என்றாலும் தன்னுடைய சிம்பிளான ஸ்டெப்பால் மிகப்பெரிய ப்ரீச்சை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூர் சாவோதயா பள்ளியில் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 43வது ஆண்டு பள்ளிக்கான நடனப் போட்டிகள் கோவையில் உள்ள இடையர்பாளையம் என்ற இடத்தில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். இது குறித்து செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய இவர் சமூக வலைதளங்கள் நல்ல அப்டேட்டாக இருந்தால் கலைத்திறமைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் எளிதாக தங்களை திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வர முடிவதாக கூறினார்.
நடன கலைகளை அனைவரும் ஊக்குவிப்பதாகவும் பள்ளிகளில் இதற்கு தனியான வகுப்புகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.