நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா அண்மைகாலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபகாலமாக இவர் வில்லன் ரோலில் நடித்து அசத்துகிறார் விஜயின் மெர்சல், மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், சிம்புவுடன் மாநாடு இப்போது கூட டான் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்து உள்ளது மேலும் பல பட வாய்ப்புகளை நிறைய கைபற்றி நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது கையில் கடமையை செய் மற்றும் பல படங்கள் இருக்கின்றன இப்பொழுது எஸ் ஜே சூர்யா ஒரு படத்திற்கு 4 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.
இவர் தொடர்ந்து நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தாலும் இவர் படங்கள் இயக்க தற்போது ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ஏனென்றால் இவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்களுக்கு ஃபேவரட் படங்களாக இருக்கின்றன.
அந்தக் காரணத்தினாலேயே எஸ் ஜே சூர்யா நடிப்பில் எந்த குறையும் இல்லை அதே சமயம் அவ்வப்போது சிறப்பான படங்களை இயக்கினால் நல்லது என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்கள் எஸ் ஜே சூரியாவிடம் நீங்கள் குஷி மற்றும் வாலி ஆகிய படங்களை இயக்கி அசத்தி உள்ளீர்கள்.
அந்த படங்கள் இப்பொழுதும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்தமான படமாக இருக்கிறது. இந்த படங்களின் இரண்டாவது பாகத்தை எடுக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என கேட்டுள்ளனர். அதற்கு எனக்கும் ரொம்ப ஆசையாகத்தான் இருக்கிறது ஆனால் இன்னும் கதை எழுதவில்லை என கூறினார்.