நான் வளர்த்து விட்டவர்களில் மிக முக்கியமானவர் ஒன்னு விஜய்.? மற்றொருவர் இவர் தான்.. எஸ். ஏ. சி பேச்சு

vijay

சினிமா உலகில் ஒருவர் வளர்ந்து விட்டால் அவரை தொடர்ந்து வாரிசுகள் ஈசியாக சினிமா உலகில் நுழைந்து விட முடியும்.. இயக்குனரும் நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் சினிமாவுலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் இவரை போலவே அவரது மகன் விஜயையும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

எஸ். ஏ. சி அவர்கள் சினிமா உலகில் எத்தனையோ நடிகர் மற்றும் இயக்குனர்களை அறிமுகப்படுத்திய இருந்தாலும் அவருக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் வளர்ந்து இருப்பவர்கள் இரண்டே பேர் தான் அவர்கள் குறித்து விலாவாரியாக எஸ்சி அவர்களே பேசி உள்ளார். நடிகர் விஜய் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும்..

ஆரம்பத்தில் அவரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியவர் எஸ். ஏ. சி அவர்கள் தான்.. நடிகர் விஜய் முதலில் காதல் ஹீரோவாக ஓடினாலும் ஒரு கட்டத்தில் அவரை கமர்ஷியல் ஹீரோவாவும், காமெடியனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் அவரை உருமாற்றிக் கொண்டே இருந்தவர் எஸ். ஏ. சி என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தான் விஜய் தற்போது இப்படி ஒரு உச்சத்தில் இருக்கிறார்.

விஜய் போலவே மற்றொருவரை வளர்த்து விட்டு உள்ளார் அவர் வேறு யாரும் அல்ல.. எஸ் எஸ் சி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷங்கர் தான். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக ஷங்கர், பவித்திரன், பொன்ராம் என பலர் இருந்தனர் இதில் இயக்குனர் ஷங்கர் மட்டுமே எஸ். ஏ. சி – யிடம் 17 படங்கள் கூட இருந்துள்ளார்.

shankar
shankar

மற்றவர்கள் அனைவருமே  இரண்டு, முன்னு படத்துடன் ஓடிவிட்டனராம்.. இதில் ஷங்கர் மட்டும் மொத்தத்தையும் கற்றுக்கொன்ற பிறகு தான் வெளியேறினார். எஸ். ஏ. சி அவர்கள் வளர்த்து விட்டவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் ஷங்கர் என பேட்டியில் வெளிப்படையாக கூறினார்.