கைதி 2 திரைப்படத்தின் சிக்ரெட்டை உடைத்த இயக்குனர் ரோகேஷ் கனகராஜ்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

kaithi-3
kaithi-3

தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது என்றாலும் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றது என்று சொல்லலாம் ஏனெனில் இதில் ஒரு சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கலாம் என லோகேஷ் கனகராஜ் கூட கூரியிருந்தார்.

ஆனாலும் இந்த திரைப்படம் மாபெரும் வசூல் வென்றது என்பது உண்மை இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலஹாசன் நடித்த விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் கைதி இரண்டாம்பாகம் எடுப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தளபதி 67 திரைப்படம் முடிந்ததன் பிறகு கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என கூறியுள்ளார் இவ்வாறு வெளிவந்த தகவலின்படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு கைது இரண்டாம் பாகத்தை கொண்டாட மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தில் கார்த்தி ஒரு கட்ட பையுடன் சென்று கொண்டிருப்பார் அதில் இருப்பது என்னவென்றால் அவர் வாங்கிய கோப்பைகள் தான் இருக்கும் என அவரே கூறியுள்ளார் ஏனெனில் அவர் மிக பிரபலமான கபடி விளையாட்டு வீரர் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்த இரண்டாம் பாகத்தில் அர்ஜுன் தாஸ் கேரக்டர் கொல்லப்படவில்லை என்று தெரிவித்தது மட்டுமில்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.