தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்து இருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் முதலில் அட்டகத்தி என்னும் காதல் படத்தை எடுத்து அசத்தினார்.
படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற ரஜினி இவரிடம் கதை கேட்டார். பா. ரஞ்சித் ரஜினியிடம் கபாலி படத்தின் கதை சொல்ல ரொம்ப பிடித்து போகவே அது படமாக உருவானது படம் வெளிவந்து நல்ல வசூலை அள்ளி அசத்தியது
அதனை தொடர்ந்து மீண்டும் ரஜினி உடன் கைகோர்த்து காலா திரைப்படத்தை இயக்கினார் பா. ரஞ்சித். இந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சூப்பராக இருந்தது. அதன் பிறகு பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.
இப்போ நடிகர் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் அதில் விக்ரமும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இதனால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுவரை தான் இயக்கிய படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த திரைப்படம் எது என்பது குறித்து பேசி இருக்கிறார்
அதன்படி பார்க்கையில் பா ரஞ்சித்திற்கு ரஜினியை வைத்து எடுத்த காலா திரைப்படம் தான் ரொம்பவும் ஸ்பெஷலான திரைப்படமாம் அந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக அற்புதமாக இருக்கும் என கூறி உள்ளார் அந்த தகவல் தற்போது இணையதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.