தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன் கையில் வைத்திருக்கும் ராஜமௌலி தற்போது மிகப் பெரிய பட்ஜெட் படங்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கிறார் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இருந்தாலும் அதை தாண்டி வசூல் ஆயிரம் மேல் வசூல் ஈட்டியது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை இணைத்து ராஜமௌலி RRR என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் சில சீன்கள் வெளிவந்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட்ட நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்காக அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் இவரின் வாழ்க்கையே இந்த படமாக உருவாக்கப்படுகிறது இதில் ராமராஜீவாக ராம்சரண் நடிக்கிறார் அதுபோல கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார்.
ராஜமௌலி படத்தின் கதையை உருவாக்க அவருக்கு உறுதுணையாக பக்கபலமாக நின்று வருவார் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது அதுபோல இந்த படத்திற்கும் அவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
RRR படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அவரை அறியாமலேயே கண்ணு தண்ணி வந்து விட்டதாம் அந்த அளவிற்கு கிளைமாக்ஸ் காட்சி இருக்கிறதாம்.
இந்த கிளைமாக்ஸ் காட்சியை மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது இது தியேட்டர்களில் பார்க்கும் அனைவருக்கும் கண்ணீர் வரவைக்கும் எனவும், இதமான ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.