படம் தான் பிரம்மாண்டனு பார்த்தா சேர்த்து வச்சிருக்க சொத்து அதைவிட பிரம்மாண்டமாக இருக்கே.. ராஜமௌலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

rajamouil
rajamouil

Rajamouil Net worth: பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமாக இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் ராஜமௌலி. இன்று ராஜமௌலி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தற்போது இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராஜமௌலி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அப்படி இந்த 12 திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது. ராஜமௌலி ஒரு படத்திற்காக தற்பொழுது 50 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் அதன்படி இவர் வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

இயக்குனர் ராஜமௌலி பிரபல கதை ஆசிரியர் விஜேய்ந்திர பிரசாத் மற்றும் ராஜ நந்தினி தம்பதியினர்களுக்கு மகனாக பிறந்தார். தனது 20 வயதிலேயே சினிமாவில் பணியாற்றி தொடங்கிய இவர் தனது அப்பாவிற்கு பயந்து சின்ன சின்ன வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். அதன்படி உருப்படமாட்ட, லாக்கி இல்லாதவன் என தன்னை தனது அப்பா திட்டுவார் என்றும் ரொம்ப நாள் கழித்து தான் நானே இயக்கத்தை கற்றுக் கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதன்படி ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமௌலி அடுத்தடுத்து படங்களை இயக்கத் தொடங்கினார். அப்படி இவர் இயக்கத்தில் தற்பொழுது வரையிலும் வெளியாகியிருக்கும் 12 திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. முக்கியமாக பாகுபாலி 1 மற்றும் 2 கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் உலகையே பிரம்மிக்க வைத்தது.

இதன் மூலம் ஆஸ்கர் விருது கௌரவத்தையும் அடைந்தார் ராஜமௌலி தற்பொழுது மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக முன்னனி வகிக்கும் ராஜமௌலி ஹைதராபாத்தில், பஞ்சாப், ஹில்ஸ் உள்ளிட்ட பகுதியில் பல கோடி மதிப்புள்ள பங்களாவை 2008ல் வாங்கினாராம்.

அதேபோல் 1.5 கோடி மதிப்பிலான எம்யுடபுள்யு மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்களையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து மொத்தமாக ரூ.158 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக ராஜமௌலி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.