சூர்யாவின் ROLEX கதாபாத்திரம் குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் – என்ன இப்படி சொல்லி இருக்காரு..

prashanth-neel
prashanth-neel

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலுக்கு விக்ரம் படத்தின் கதையை சொல்லி அசத்தினார் அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே அந்த படம் உடனடியாக உருவாக்கப்பட்டது மேலும் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம்.

அந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தது படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது கதை, திரைக்கதை என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட்  டினா, பகத் பாசில் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர். தற்போது வரையிலும் விக்ரம் படம் உலகம் முழுவதும் 420 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக விக்ரம் திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில்  கே ஜி எஃப் 2 படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை பார்த்து வியந்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது. விக்ரம் படத்தில் கமல் சார், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றவர்களை ஒன்றாக திரையில் பார்ப்பது விருந்து உங்கள் படங்களுக்கு நான் big admirer.

அனிருத் நீங்க ஒரு சூப்பர் ஸ்டார் அன்பறிவு மாஸ்டர்களை பார்த்தது இன்னும் பெருமையாக இருக்கிறது என பிரசாந்த் நீல் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பார்த்து விட்டு அதில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.