பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் பிரசாந்த் நீல்.!

தமிழ் மக்களை அதிகம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபாஸ் இவரது திரைப்படங்களுக்கு தமிழில் எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகிவரும் சலார் திரைப்படத்தையும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் எப்பொழுது முடிந்து வெளியாகும் என பல ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் அதேபோல் இந்த திரைப்படம் வெளியானால் நடிகர் பிரபாஸ் தொடர்ச்சியாக பலதிரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் புதிதாக வெளியாகியுள்ளது ஆம் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார் அதனை இந்த திரைப்படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை இந்த திரைப்படத்தில் ஜெகபதி பாபு புதிதாக இணைந்துள்ளாராம் மேலும் அவருக்கு இந்த திரைப்படத்தில் ராஜாமணர் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் நடித்தால் வில்லனாக நடிப்பாரா இல்லை முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பாரா என்பது மட்டும் தெரியவில்லை எப்படி நடித்தாலும் இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.