பிரபாஸை விடாமல் துரத்தும் இயக்குனர் பிரசாந்த் நீல்.! இப்போ எப்படிப்பட்ட படம் எடுக்க போறாங்க தெரியுமா.? மிரளும் இந்திய சினிமா

prashanth neel
prashanth neel

சினிமாவுலகில் திறமை இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் உச்சத்தைத் தொட முடியும். தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் பிரபாஸ் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைய முடியாமல் திக்கு முக்காடி வந்த நிலையில் ராஜமௌலி அவருக்கு ஒரு சிறப்பான கதையை சொல்ல அந்த கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்கவும் தொடங்கினார்.

இந்த படத்திற்காக அவர் மிக கடினமாக உழைத்தார் அதன் விளைவாக இந்த படமும் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது இதைத் தொடர்ந்து அவரது மார்க்கெட்டும் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டது.

தற்போது பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் 200 கோடி பட்ஜெட்டுக்கு மேல் உருவாகுவதால் அந்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது. பாகுபலி சீரிஸ் முடிந்து சலார்,  ஆதிபுருஷ், ராதேஷியம் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

மிகப் பெரிய பட்ஜெட் படங்களை தொடர்ந்து அவர் மீண்டும் பிரசாந்த் நீலுடன் இணைந்து ஒரு வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகின்றன.

கதையை பிரபாசும் கேட்டுவிட்டு சிறப்பாக இருக்கிறது என கூறி உள்ளார் இதனால் சலார்  படத்தை முடித்துவிட்டு பிரபாஸும், பிரசாந்த் மீண்டும் ஒருமுறை கைகோர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.